தே.மு.தி.க., கூட்டத்தில்வேட்டி, சேலை வழங்கல்


தே.மு.தி.க., கூட்டத்தில்வேட்டி, சேலை வழங்கல்


ஜலகண்டாபுரம்:ஜலகண்டாபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே, தே.மு.தி.க., கொடி நாள், 25ம் ஆண்டு வெள்ளிவிழா, நலத்திட்ட உதவி வழங்கும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. சேலம் மேற்கு மாவட்ட செயலர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். தொழிற்சங்க பேரவை சட்ட துணை ஆலோசகர் ராகவ்பிரகாஷ், 70,000 ரூபாய் மதிப்பில், மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவி
களை வழங்கி பேசினார். ஜலகண்டாபுரம் பேரூர் செயலர் இருசப்பன், நங்கவள்ளி ஒன்றிய செயலர் மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.

Advertisement