மாரியம்மன் கோவிலில்கும்பாபிேஷகம்


மாரியம்மன் கோவிலில்கும்பாபிேஷகம்


வீரபாண்டி:சேலம், உத்தமசோழபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள விநாயகர், புதிதாக வராகி அம்மன், விஷ்ணு துர்க்கை, பிரத்யங்கரா தேவி உள்பட பரிவார தெய்வங்கள் பிரதிஷ்டை செய்து கும்பாபிேஷக விழா கடந்த, 6ல் தொடங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு மேல், 4 கால யாக பூஜை, மகா பூர்ணாஹூதியுடன் நிறைவடைந்தது. 10:00 மணிக்கு யாத்ரா தானத்துடன் யாகத்தில் வைத்து பூஜித்த புனிதநீர் கலசங்கள், சிவாச்சாரியார்களால் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துச்சென்று அங்கு விமான கலசங்களுக்கு, வேத மந்திரங்கள், பக்தர்களின், 'ஓம்சக்தி பராசக்தி' கோஷம் முழங்க ஊற்றி, கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. பின் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் புனிதநீரால் அபி ேஷகம் செய்து சர்வ அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement