சிறப்பு போலீஸ் படைநுாலகம் திறப்பு
சிறப்பு போலீஸ் படைநுாலகம் திறப்பு
மேட்டூர்:மேட்டூர், 840, 600 மெகாவாட் அனல்மின் நிலையங்களில் போச்சம்பள்ளி தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படையினர், 122 பேர் தங்கி சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் ஓய்வு நேரத்தில் படிக்கவும், போட்டி தேர்வு எழுதவும், அவர்கள் முகாமில், 2,500 நுால்களுடன் கூடிய நுாலக திறப்பு விழா நேற்று நடந்தது. படை எஸ்.பி., சரவண சங்கு திறந்து வைத்து பேசுகையில், ''நுாலகத்தில் அரசு துறையில் உயர் பதவி பெறுவதற்கு படிக்க வேண்டிய நுால்கள் வழங்கப்பட்டுள்ளன. போலீசார் படித்து உயர்பதவிக்கு தேர்வு பெற வேண்டும்,'' என்றார்.
திருநெல்வேலி கூடுதல் மாவட்ட நீதிபதி சுரேஷ்குமார்(பெண்களுக்கு எதிரான குற்றங்கள்), படை ஏ.டி.எஸ்.பி., வெங்கடாசலம், உதவி தளவாய் தனலட்சுமி, உணவு பொருள் கடத்தல் குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., வடிவேலு உள்பட பலர்
பங்கேற்றனர்.
மேலும்
-
40 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
-
காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் பெயர் பலகையுடன் நுழைவாயில் அமைப்பு
-
காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் நாளை வெள்ளி ரத உத்சவம்
-
ஜயேந்திரர் ஆராதனை மஹோத்சவம் காஞ்சி சங்கர மடத்தில் துவக்கம்
-
கோழி இறைச்சி கழிவால் சீரழியும் சாலமங்கலம் ஏரி
-
காஞ்சிபுரம் - பெரும்பாக்கம் சாலையில் ஊர் பெயருடன் கி.மீ., கற்கள் அமைப்பு