ரூ.1.50 லட்சம் மதிப்பில் கே.டி.எம்., பைக் திருட்டு


ரூ.1.50 லட்சம் மதிப்பில் கே.டி.எம்., பைக் திருட்டு

சேலம்:சேலம், மணியனுார் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 34. கடந்த, 5 இரவு, கே.டி.எம்., டியூக் பைக்கை, வீடு முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த கார்த்திகே யன், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
அதேபோல் அயோத்தியாப்பட்டணம், பெரியகவுண்டாபுரத்தை சேர்ந்த பெயின்டிங் கான்ட்ராக்டர் குமார் மனைவி பொன்னு மணி, 40. இவரது, டியோ மொபட்டை, நேற்று முன்தினம் இரவு, வீடு முன் நிறுத்தியிருந்தார்.
நேற்று காலை மொபட்டை காணவில்லை. பொன்னுமணி புகார்படி, காரிப்பட்டி போலீசார், 'சிசிடிவி' பதிவை ஆய்வு செய்து, மொபட் திருடியவரை
தேடுகின்றனர்.

Advertisement