பட்டா நிலத்தில் இருந்தபனை மரங்களை வெட்டிஅகற்றியதால் விசாரணை



பட்டா நிலத்தில் இருந்தபனை மரங்களை வெட்டிஅகற்றியதால் விசாரணை

பெத்தநாயக்கன்பாளையம்:பெத்தநாயக்கன்பாளையம், புத்திரகவுண்டன்பாளையம் அருகே தெற்கு காடு ஏரிக்கரையில், அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதாக, நேற்று முன்தினம் வருவாய்த்துறையினரிடம் மக்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரித்த, வி.ஏ.ஓ., வாசுதேவன் கூறுகையில், ''ஏரிக்கரை அருகே தனி நபர் பட்டா நிலத்தில் இருந்த, 10க்கும் மேற்பட்ட பனை மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement