சுற்றுலா வேன் கவிழ்ந்து20 பேர் காயம்


சுற்றுலா வேன் கவிழ்ந்து20 பேர் காயம்


ஆத்துார்:சேலம், கருங்கல்பட்டியை சேர்ந்தவர் நடராஜன், 71. இவர், 70 வயதை கடந்த நிலையில், 'பீமரத சாந்தி' திருக்கல்யாண நிகழ்ச்சியை, மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில், மனைவி னலட்சுமியுடன் கொண்டாடினர்.
இதில் குடும்பத்தினர், உறவினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அனைவரும் சுற்றுலா வேனில் புறப்பட்டனர். டிரைவர் இர்பான், 30, ஓட்டினார்.
நேற்று இரவு, 8:10 மணிக்கு, சேலம் மாவட்டம் ஆத்துார் புறவழிச்சாலை, அப்பமசமுத்திரத்தில் வந்தபோது, வேன் முன்புற டயர் வெடித்ததில், டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் தம்பதி உள்பட, 20 பேர் காயம் அடைந்து, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின் குணசேகரன், ராஜேஸ்வரி, ராஜம்மாள், ரங்கநாயகி, தேன்மொழி, மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு
சென்றனர். ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement