பா.ம.க., - எம்.எல்.ஏ., வர தாமதம்விழாவில் காத்திருந்த தி.மு.க.,வினர்


பா.ம.க., - எம்.எல்.ஏ., வர தாமதம்விழாவில் காத்திருந்த தி.மு.க.,வினர்


ஓமலுார்:ஓமலுாரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், திட்ட அலுவலர் அருள்மொழி தலைமையில், சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அதில் ஓமலுார், காமலாபுரம், முத்துநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 100 கர்ப்பிணியருக்கு, தமிழக அரசு சார்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. சேலம் மேற்கு தொகுதி
எம்.எல்.ஏ., அருள், கர்ப்பிணியருக்கு வாழ்த்து தெரிவித்து, குடைகளை பரிசாக வழங்கினார்.
முன்னதாக காலை, 10:00 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டதால், ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி உள்ளிட்ட தி.மு.க.,வினர் வந்திருந்தனர். ஆனால் எம்.எல்.ஏ., வர தாமதமானதால், ஒரு மணி நேரம் காத்திருந்த தி.மு.க.,வினர், பின் சிலருக்கு மட்டும் நலுங்கு வைத்துவிட்டு சென்றனர்.

Advertisement