ஹோட்டல் ஊழியரிடம் போன் பறித்தவர் கைது

சென்னை,
வேளச்சேரியைச் சேர்ந்தவர் முருகன், 44; தனியார் ஹோட்டல் மேலாளர். இவர், டிச., 19ம் தேதி, கிண்டி ஐந்து பர்லாங் சாலையில் மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார்.

அப்போது, எதிரே இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களில் ஒருவர், முருகனிடம் இருந்து மொபைல் போனை பறித்து தப்பினர். கிண்டி காவல் நிலைய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, கண்டிகையைச் சேர்ந்த சிரில்ராஜ், 27, என்பவரை கைது செய்தனர்.

அவர் மீது ஏற்கனவே, மூன்று குற்ற வழக்குகள் உள்ளன. கூட்டாளியுடன் சேர்ந்து, இரவு நேரத்தில் பணி முடித்து தனியாக நடந்து செல்லும் ஹோட்டல் ஊழியர்களை குறிவைத்து, மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement