எச்சரித்த உளவுத்துறை ரவுடிகள் மூவர் கைது

சென்னை, புளியந்தோப்பு பகுதியில் முன்விரோதம் காரணமாக, சிலர் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை வாயிலாக, புளியந்தோப்பு போலீசாருக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி போலீசார், சந்தேகம்படும் படி சுற்றித் திரிந்த இருவரை பிடித்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதில், புளியந்தோப்பு, காந்தி நகரைச் சேர்ந்த அருப்பு சங்கர், 38, மண்டை பிரசாந்த், 25, என தெரிந்தது.

இவர்கள், கொலை செய்யப்பட்ட கருப்பா ரகுபதி என்பவரது கூட்டாளிகள் என்பதும், அந்த கொலைக்கு பழிவாங்க திட்டம் தீட்டியதும் தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடுகின்றனர்.

அதேபோல், புளியந்தோப்பு, அம்பேத்கர் கல்லுாரி சாலை அருகே சூர்யா, 25, என்பவரை கத்தியால் தாக்கிய வழக்கில், கன்னிகாபுரத்தைச் சேர்ந்த ரீகன், 25, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.

Advertisement