ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

முத்தியால்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜயலிங்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் வீதியில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் பொதுமக்களை பார்த்து ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தனர்.

அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் மரக்காணத்தைச் சேர்ந்த குமரவேல், 22, என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Advertisement