ஏம்பலம் கோவிலில் மயானக் கொள்ளை

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த ஏம்பலம் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி கோவிலில் 18ம் ஆண்டு மயானக் கொள்ளை விழா நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, மாலை 6:00 மணிக்கு கும்ப படையல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:00 மணிக்கு வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து, மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது.

விழாவில் ஏம்பலம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தங்களது வீடு, வயல் நிலங்களில் விளைந்த காய்கறிகள், கனிகளை மயானத்தில் கொள்ளை விட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Advertisement