ஆஸ்திரேலியாவில் கம்பன் விழா சிவக்கொழுந்து பங்கேற்பு

புதுச்சேரி: ஆஸ்திரேலியாவில் நடந்த கம்பன் விழாவில் புதுச்சேரி கம்பன் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆஸ்திரேலியவில் உள்ள மெல்போர்னில் கம்பன் விழா நடந்தது. புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்கொழுந்து கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ சரவணன், இலங்கை ஜெயராஜ்,பர்வீன் சுல்தானா, கம்பன் திரைப்பட இயக்குநர் ரவி குணவதி மைந்தன், மெல்போர்ன் கம்பன் கழக தலைவர் குமாரதாஸ், செந்தில் குமார், சிட்னி கம்பன் கழக தலைவர் திருநந்தகுமார், புதுச்சேரி கம்பன் கழக துணை தலைவர் அசோகன் கலந்து கொண்டனர்.

Advertisement