மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க வலியுறுத்தல்

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், பென்னலூர் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மற்றும் மழைநீர் ஆகியவை, தெருக்களிலே தேங்கி வந்தது.

இதனால் அப்பகுதியில் நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் இருந்து வந்தது.

எனவே, அப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2022 --- 23ம் நிதி ஆண்டில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தில், 17.60 லட்சம் ரூபாய் செலவில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது.

தற்போது, கால்வாய் முறையான பராமரிப்பு இல்லாமலும், செடி, கொடிகள் வளர்ந்துஉள்ளன.

எனவே, மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement