மாணவ விஞ்ஞானிகளுக்கான 'தேடல் - 2025' போட்டி

காஞ்சிபுரம்,: 'காஞ்சி டிஜிட்டல் டீமின்', ஏழாம் ஆண்டு மாணவ விஞ்ஞானிகளுக்கான தேடல் 2025க்கான போட்டிகள் கடந்த மாதம் துவங்கியது.

தமிழகம் முழுதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, போட்டிகளுக்கான தலைப்பு வழங்கப்பட்டது.

இதில், 550க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இணைய வழி வாயிலாக பெறப்பட்டு அவற்றை தலைப்புக்கு ஏற்றவாறு மதிப்பீட்டாளர்கள் மதிப்பு செய்து 80 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள், தங்களது படைப்புகளை, நேரடி அறிவியல் மாதிரியை விளக்கும் போட்டி,காஞ்சி புரம் கா.மு சுப்புராயமுதலியார் மேல் நிலைப் பள்ளியில் நேற்றுநடந்தது.

எஸ்.ஆர்.எம்.தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர்கள், லயன் சங்க பொறுப்பாளர்கள், அலையன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்

இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம், பதக்கம், விதை பென்சில் வழங்கப்பட்டது. காஞ்சி டிஜிட்டல் டீம் ஒருங்கிணைப்பாளர் அமுதா வரவேற்றார்.

Advertisement