சட்டப்போராட்டத்திற்கு ஐ.ஜே.கே., ஆதரவு அளிக்கும்

காஞ்சிபுரம்,: சட்டப் போராட்டம் நடத்தினால், எங்கள் கட்சியினர் அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் என, ஏகனாபுரம் கிராமத்தில், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில், பசுமை வெளி விமான நிலையம் அமைய உள்ளது. இதில், ஏராளமான விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் முழுதுமாக பாதிக்கப்படுகின்றன.
ஏகனாபுரம் கிராமத்தினர் தொடர்ந்து, இரவு நேர போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக அமைப்பு தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து நேற்று, ஏகனாபுரம் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
விமான நிலையத்தால் பாதிப்பு ஏற்படக்கூடிய கிராமத்தினர், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தினால், எங்கள் கட்சி அவர்களுக்கு ஆதரவு அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
மாஜி முதல்வர் பூபேஷ் பாகலுக்கு குறி: சத்தீஸ்கரில் 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கல்வி நிதி விவகாரத்தில் அனல் பறந்த விவாதம்; அமளியால் லோக்சபா ஒத்தி வைப்பு!
-
லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு
-
பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
-
தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்