22ல் யதோக்தகாரி கோவில் பிரம்மோத்சவம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், நடப்பாண்டு பங்குனி பிரம்மோத்சவம், வரும் 22ம் தேதி, காலை 5:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

மூன்றாம் நாள் உத்சவமான மார்ச் 24ம் தேதி காலை, கருடசேவை உத்சவமும், ஏழாம் நாள் உத்சவமான தேரோட்டம் 28ம் தேதி காலை நடைபெறுகிறது. 30ம் தேதி தீர்த்தவாரியும், மார்ச் 31ம் தேதி வெட்டிவேர் சப்பரத்துடன், 10 நாள் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.

Advertisement