மணிகண்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் விமரிசை

திருமால்பூர் : ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில், திருமால்பூர் கிராமம் உள்ளது. இங்கு, ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப் பாட்டில், அஞ்சனாட்சி சமேத மணிகண்டீஸ் வரர் கோவில் உள்ளது.
இக்கோவில், மாசி மாத பிரம்மோத்சவ விழா, மார்ச் -3ம் தேதி, அதிகாலை கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.
உத்சவத்தின், 7வது நாளான நேற்று, காலை 8:00 மணி அளவில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது.
தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று,மீண்டும் கோவிலைவந்தடைந்தது.
கீற்றில் தீ
இந்த நிகழ்ச்சிக்கு, கைத்தறி துறைஅமைச்சர் காந்தி மற்றும் தி.மு.க.,வினர் சுவாமி தரிசனம் செய்ய, பெரிய தெருவிற்கு வந்தனர். அமைச்சரை வரவேற்க, தி.மு.க.,வினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.
அப்போது, அதே தெருவில் செல்வவிநாயகர் கோவில்கட்டுமானத்திற்கு போடப்பட்டிருந்ததென்னங்கீற்றுதடுப்பு எரிந்துநாசமானது.
இந்த தீ விபத்து குறித்து, நெமிலிபோலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
மாஜி முதல்வர் பூபேஷ் பாகலுக்கு குறி: சத்தீஸ்கரில் 15 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
கல்வி நிதி விவகாரத்தில் அனல் பறந்த விவாதம்; அமளியால் லோக்சபா ஒத்தி வைப்பு!
-
லலித் மோடியின் பாஸ்போர்ட் ரத்து; இந்தியாவின் கோரிக்கையை ஏற்பு
-
பள்ளி மாணவனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு; 3 மாணவர்கள் கைது
-
காஷ்மீருக்கு அம்ரித் பாரத் ரயில் சேவை; தமிழக சுற்றுலா பயணிகள், யாத்ரீகர்களுக்காக ரயில்வே திட்டம்
-
தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பதில் உலகளவில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்