திடீரென முடங்கிய எக்ஸ் வலைதளம்; சேவைகள் பாதித்ததாக பயனர்கள் அதிருப்தி

சான்பிரான்சிஸ்கோ; உலகம் முழுவதும் திடீரென எக்ஸ் வலைதளம் முடங்கியதால் பயனர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.



சமூக வலைதளத்தில் அதிகம் பேர் பயன்படுத்தி வரும் ஊடகம் எக்ஸ் தளம். உலகம் முழுவதும் ஏராளமானோர் கையாண்டு வரும் எக்ஸ் தளம் இன்று (மார்ச் 10) திடீரென முடங்கியது.


எக்ஸ் தளத்தில் உள்நுழைய முடியாமல் சிக்கல் ஏற்பட்டதாக பயனாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர். பிற்பகல் 3.30 மணி முதல் 3.45 மணி வரை சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் அவர்கள் கூறினர்.


15 நிமிடங்கள் கழித்து பிரச்னை சரியாகி எக்ஸ் தளம் செயல்பாட்டுக்கு வந்தது. எக்ஸ் வலைதளம் இதுபோன்று செயல்படாமல் இருப்பது முதல் முறையல்ல. கடந்தாண்டு பலமுறை முடங்கியது, குறிப்பிடத்தக்கது.

Advertisement