சேதமடைந்த கால்வாய் பாலம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்

பொன்னேரி, பொன்னேரி அடுத்த உப்பளம் கிராமத்தில் இருந்து மடிமைகண்டிகைசெல்லும் சாலையில், ஓடைக்கால்வாயின் குறுக்கே உள்ள பாலம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. பாலத்தின் தளம் முழுதும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இருசக்கர வாகனங்கள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றன.

திடீரென பிரேக் போடும்போது, ஜல்லிக் கற்களில் சிக்கி, வாகனங்கள் கீழே விழுந்து வாகன ஓட்டிகள் சிறு சிறு விபத்துகளுக்கு ஆளாகி வருகின்றனர். பாலத்தின் துாண்களில் செடிகள் வளர்ந்தும், கான்கிரீட் பூச்சுகள் கொட்டியும், உறுதி தன்மையை இழந்து வருகிறது.

இந்த பாலத்தை கடந்துதான் ஏராளமான கிராமத்தினர் பொன்னேரி வந்து செல்ல வேண்டும்.

பாலம் சேதமடைந்து வருவதால், கிராமவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் சேதமடைந்து வரும் பாலத்தை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement