ஸ்னுாக்கர்: அத்வானி 'ஹாட்ரிக்' சாம்பியன்

மும்பை: கிளாசிக் ஸ்னுாக்கர் தொடரில் பங்கஜ் அத்வானி 'ஹாட்ரிக்' பட்டம் வென்றார்.

மும்பையில், சி.சி.ஐ., ஸ்னுாக்கர் கிளாசிக் தொடர் நடந்தது. இதன் பைனலில் பெட்ரோலிய விளையாட்டு மேம்பாட்டு வாரியம் (பி.எஸ்.பி.பி.,) அணியின் பங்கஜ் அத்வானி, இஷ்பிரீத் சிங் சதா மோதினர். துவக்கத்தில் 2-6 என பின்தங்கிய அத்வானி, பின் எழுச்சி கண்டு தொடர்ச்சியாக 6 'பிரேம்'களை கைப்பற்றினார். முடிவில் அத்வானி 8-6 என்ற கணக்கில் (15---57, 26---101, 18--75, 100--25, 36--93, 118--0, 59--68, 45--77, 64--47, 93--72, 70--60, 75--32, 73--32, 75--47) 'திரில்' வெற்றி பெற்றார்.

இதுவரை 28 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அத்வானி, இத்தொடரில் தொடர்ந்து 3வது முறையாக (2023, 2024, 2025) கோப்பை வென்றார். 'நடப்பு தேசிய, ஆசிய சாம்பியன்' அத்வானிக்கு, கோப்பையுபன் ரூ. 3.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த இஷ்பிரீத் சிங்கிற்கு ரூ. 1.75 லட்சம் பரிசு கிடைத்தது.

Advertisement