ராணுவ அதிகாரிகளாக பணியாற்ற வாய்ப்பு

தேசிய மாணவர் படையான, என்.சி.சி., சான்றிதழ் வைத்திருப்போர், போரில் உயிர் தியாகம் செய்தவர்களின் வாரிசுகள் ஆகியோர், ராணுவ அதிகாரிகளாக பணியாற்றுவதற்கான அறிவிப்பை, இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.

இதில் சேர, 19 முதல் 25 வயது உட்பட்டவர்களாக, ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில், குறைந்தது, 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க, வரும் 15ம் தேதி கடைசி நாள். கூடுதல் விபரங்களை, www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement