நடைபாதை ஆக்கிரமிப்பால் பாதசாரிகளுக்கு ஆபத்து

மாதவரம், புழல் - பெரம்பூர் இடையே ரெட்டேரி, லட்சுமிபுரம் பகுதியில் மேம்பாலத்தை ஒட்டி சாலையின் இருபுறமும் 20க்கும் மேற்பட்ட மீன் கடைகள், டிபன் மற்றும் மாலைக்கடைகள் உள்ளன.
சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள இக்கடைகளாலும், இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்களின் பைக் உள்ளிட்ட வாகனங்களை, கடை அருகிலேயே நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு தினமும் தொடர்கிறது.
மேலும், மீன் கடை கழிவுகள் அருகே உள்ள கால்வாயிலேயே கொட்டுவதால் சுகாதாரச் சீர்கேடும் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு கடைகளை மாநகராட்சி அவ்வப்போது எடுத்தாலும், ஓரிரு நாளிலேயே மீண்டும் முளைத்து விடுகின்றன. இதனால், பாதசாரிகள் விபத்து அபாயத்தில் சாலையில் நடந்து செல்லும் நிலைமை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சேதமான நிலையில் பள்ளி கட்டடங்கள்: புதுப்பிக்கலாமே: கண்டு கொள்ளாத கல்வி துறையால் அவதி
-
'பெட்டி'யுடன் வந்தால் 'வடக்கில்' வேலை நடக்கும் வா! சிட்டிக்குள் தலையெடுக்குது எடக்கு மடக்கான 'ஸ்பா'
-
கைதியிடம் கஞ்சா போலீசார் விசாரணை
-
சிறுமலையில் குற்ற செயல்களில் போதை நபர்கள் காட்டேஜ்களில் புகுந்து பயணிகளுக்கு தொல்லை
-
நேரு கல்லுாரியில் மகளிர் தின விழா
-
ஜி.எஸ்.டி., வரி பயிற்சி கூட்டம் 'ஹெல்ப் டெஸ்க்' துவங்க உறுதி
Advertisement
Advertisement