யானை சவாரி மையத்திற்குள் நுழைந்த படையப்பா

மூணாறு; மதம் பிடித்த அறிகுறியுடன் சுற்றித்திரியும் படையப்பா யானை தனியார் யானை சவாரி மையத்தில் வளர்ப்பு யானைகளுடன் இணைந்துள்ளது.

மூணாறு பகுதியில் வலம் வரும் படையப்பா ஆண் காட்டு யானை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மதம் பிடித்த அறிகுறியுடன் சுற்றித் திரிகிறது. மூணாறு அருகே கொரண்டிக்காடு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக முகாமிட்ட படையப்பா, அதே பகுதியில் மாட்டுபட்டி ரோட்டில் உள்ள தனியார் யானை சவாரி மையத்திற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்றது. அங்கு ஆறு பெண் யானைகள் கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்குள் நுழைந்து நின்றது. படையப்பாவை பார்த்ததும் வளர்ப்பு யானைகள் கடுமையாக பிளிறின.

சந்தேகம் அடைந்த பாகன்கள், ஊழியர்கள் வந்து பார்த்தபோது பெண் யானைகளுடன் படையப்பா நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பலமாக கூச்சலிட்டு தக்க சமயத்தில் படையப்பாவை விரட்டினர்.

Advertisement