அரசு பள்ளி ஆண்டு விழா மாணவர்கள் கலைநிகழ்ச்சி

உடுமலை : பூலாங்கிணர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
அப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவிற்கு, பள்ளி தலைமையாசிரியர் விமலா தலைமை வகித்தார். உதவி ஆசிரியர் சுதா வரவேற்றார்.
பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சரவணன், 'பெற்றோரின் கடமைகள்' என்ற தலைப்பில் பேசினார். ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆசிரியர் கண்ணபிரான், 'அரசு பள்ளி பெருமையின் அடையாளம்' என்ற தலைப்பில் பேசினார்.
ஆசிரியர்கள் ரமா நாச்சியார், சந்திராமணி முன்னிலை வகித்தனர். மாணவர்களின், நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், நாடகம், கும்மி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
புவி வெப்பமயமாதல், மாறிவரும் காலச்சூழல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பிளாஸ்டிக் தவிர்ப்பு உள்ளிட்ட கருத்துகள் குறித்து மாணவர்கள் நாடகம் நடத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும்
-
தங்கவயல் எம்.எல்.ஏ.,வை கண்டுகொள்ளாத அமைச்சர்
-
எதிர்க்கட்சியினர் சோடை சட்டசபை கூட்டத்தொடர் 'புஸ்'
-
மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் அத்துமீறினால் 10 ஆண்டு சிறை
-
மேம்பாட்டு பணிகளை செயல்படுத்த தனி நிறுவனம் அமைக்க அரசு திட்டம்
-
'முடா' முன்னாள் கமிஷனர் நடேஷுக்கு 'நோட்டீஸ்'
-
கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் புகார் மனு