புனித அருளானந்தர் கிளைச்சபை சார்பில் ரத்த தான முகாம்

கோவை, : புனித அருளானந்தர் கிளைச்சபை சார்பில், நடந்த ரத்த தான முகாமில் 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

புனித வின்சென்ட் தே பவுல் சபை, புனித அருளானந்தர் கிளைச்சபை, கோவை அரசு மருத்துவமனை சார்பில், 'தவக்கால' ரத்ததானம், ஆர்.எஸ்.புரம் புனித அருளானந்தர் ஆலயத்தில் நடந்தது.

முகாமை, ஆலய பங்குத்தந்தை பால்ராஜ் அடிகளார் துவக்கி வைத்தார்.

இதில் அருட்சகோதரிகள், அருட்பணியாளர்கள், ஆலய உதவி பங்குத்தந்தை சிபுகரோலின் அடிகளார் பொது மக்கள் என, 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

Advertisement