17 வயது சிறுமிக்கு திருமணம் பெற்றோர் மீது நடவடிக்கை
திருப்பூர், : பதினேழு வயது சிறுமிக்கு திருமணம் செய்த பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெருமாநல்லுாரில் கடந்த, 9ம் தேதி குழந்தை திருமணம் நடைபெற உள்ளதாக, 'சைல்டு ஹெல்ப்லைன்' எண்ணுக்கு காலை, 8:15 மணிக்கு தகவல் தெரிய வந்தது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்கு முன்னதாகவே திருமணம் நடந்து முடிந்துவிட்டது.
அதிகாரிகள் குழு நடத்திய விசாரணையில், 17 வயதுடைய சிறுமிக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டதும்; அவருக்கு விருப்பமில்லாத நிலையில், 25 வயதான தாய்மாமன் மகனுடன் திருமணம் செய்து வைக்கப்பட்டது தெரிந்தது.
இதனை தொடர்ந்து, சிறுமியை மீட்டு, காப்பகத்தில் தங்கவைத்தனர். திருமணத்தை நடத்திய இருதரப்பு குடும்பத்தார் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
நீலகிரியில் லோக் அதாலத் 681 வழக்குகளுக்கு தீர்வு
-
விளைநிலத்தில் மண் மாதிரி எப்படி எடுக்கணும்! வேளாண் மாணவியர் விழிப்புணர்வு
-
சாலையில் யானை: போக்குவரத்து பாதிப்பு
-
யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வருவதை தடுக்க ஆக்க பூர்வமான நடவடிக்கை; விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆர்.டி.ஓ., உறுதி
-
நெடுஞ்சாலையில் விபத்தை ஏற்படுத்தும் தடுப்பு கற்கள்
-
சென்றாய பெருமாள் கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்