காஞ்சி புகார் பெட்டி : சேதமடைந்த கால்வாய் சீரமைக்கப்படுமா?

காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் சாலையோரம் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள இக்கால்வாய் தாலுகா அலுவலகம் நுழைவாயில் அருகில் சேதமடைந்த நிலையில் உள்ளது.
சேதமடைந்த பகுதியை முழுமையாக சீரமைக்காமல், அப்பகுதியில், இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. சாலை வளைவில் திரும்பும்போது இருசக்கர வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சேதமடைந்த கால்வாயை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கே.ரஜினிகாந்த், காஞ்சிபுரம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement