கும்பாபிஷேக விழா

அன்னுார் : சித்தர்களில் முதன்மையானவரான அகத்திய பெருமானுக்கு, பொகலூர் அருகே அழகப்ப கவுண்டன் புதூரில் புதிதாக கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில், அகத்தியரின் துணைவியார் லோப முத்திராவுக்கும், உச்சிஷ்ட மகாகணபதிக்கும், சிவனுக்கும், லிங்க திருமேனிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் துவங்கியது. நேற்று காலை 9:40 மணிக்கு, அகத்தியர் மற்றும் தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

கோவில் நிர்வாகிகள் கூறுகையில்,' இங்கு தினசரி வழிபாடு நடைபெறும். தியான மண்டபத்தில் தியானம் செய்யலாம். மண்டல பூஜைக்கு பிறகு தினமும் அன்னதானம் நடைபெற உள்ளது. 27 நட்சத்திரங்களுக்கு 27 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. 12 ராசிகளுக்கு 12 சக்கரங்கள் நிறுவப்பட உள்ளன, என்றார்.

இதில் பொதுமக்கள் பங்கேற்று இறையருள் பெற விழா குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement