யுவா பப்ளிக் பள்ளியில் கலை கலாசார கண்காட்சி

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையத்தில் உள்ள யுவா பப்ளிக் பள்ளியில் கலை, கலாசார கண்காட்சி நடந்தது.

விழாவுக்கு பள்ளியின் தலைவர் சண்முகம் தலைமை வகித்து கண்காட்சியை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பாரத நாட்டின் பெருமைமிகு கலாசாரம், பண்பாடு பற்றிய விழிப்புணர்வை மாணவ, மாணவியர்களுக்கு ஏற்படுத்த இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.நிகழ்ச்சியில், கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா அரங்குகளை பள்ளியின் தாளாளர் சத்யா, அறங்காவலர்கள் பூர்ணிமா, பள்ளியின் முதல்வர் ராஜேஸ்வரி, பெற்றோர் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

விழாவை ஒட்டி மாணவ, மாணவியரின் நம் நாட்டின் கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் நடனங்கள் இடம் பெற்றன. மாணவர்கள் காட்சிப்படுத்திய கலை பொக்கிஷங்கள், பார்வையாளர்களை கவர்ந்தன.

Advertisement