நேரு கல்லுாரியில் மகளிர் தின விழா

கோவை : நேரு கல்வி குழுமங்களின் சார்பில், சர்வதேச மகளிர் தின விழா, கல்லுாரியின் நேதாஜி ஹாலில் நடந்தது. விழாவிற்கு தலைமை வகித்த நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணக்குமார், பெண்களின் திறன் மேம்பாடு குறித்து ஊக்கப்படுத்தும் வகையில் பேசினார்.

நேரு சர்வதேச பள்ளியின் தாளாளர் சைதன்யா பேசுகையில், ''ஒரு குடும்பத்தின் இதயம் போன்றவர்கள் பெண்கள். அவர்களை சுற்றிலும் தான் மகிழ்ச்சி வட்டம் உள்ளது.

''சிறந்த தலைமுறையை பெண்களால்தான் உருவாக்க முடியும்,'' என்றார். பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

நேரு கல்வி குழுமங்களின் செயல் இயக்குனர் நாகராஜா, முதல்வர்கள், நிர்வாகிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Advertisement