சேதமான நிலையில் பள்ளி கட்டடங்கள்: புதுப்பிக்கலாமே: கண்டு கொள்ளாத கல்வி துறையால் அவதி

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி கட்டடங்களின் உறுதித்தன்மையை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு நிம்மதியை தருவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இனிவரும் காலங்களில் கட்டும் பள்ளிகட்டடங்களை தரமாக கட்டுவதற்கு கவனம் செலுத்த வேண்டும்.
மாவட்டம் முழுவதும் ஏராளமான அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிறு குழந்தைகளுக்கான விளையாட்டு பள்ளிகள் செயல்படுகிறது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் சந்தைப்பேட்டை ரோடு பகுதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 4 ம் வகுப்பு கட்டட கூரை பெயர்ந்து மாணவர்கள் தலையில் விழுந்தது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளையும் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி, கல்வித்துறை அனைத்துறை அலுவலர்களும் சேர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்னும் சில நாட்களில் கோடை விடுமுறை வர உள்ளது. அதிகாரிகள் விடுமுறை நாட்களில் சேதமான கட்டடங்களை தேர்வு செய்து தரமான முறையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
.....
பாதுகாப்பு உறுதி வேண்டும்
அரசு பள்ளி கட்டடங்கள் பல இடங்களில் சேதமாக உள்ளது. தரமில்லாமல் பணிகள் செய்யப்பட்டது தான் அடிக்கடி நடக்கும் விபத்துக்களுக்கு காரணமாக உள்ளது. தரமில்லாமல் கட்டடங்களை கட்டும் கான்ட்ராக்டர்களுக்கு ஒப்பந்தம் கோடுப்பதை முதலில் நிறுத்த வேண்டும். மராமத்து பணிகள் செய்ய வேண்டுமானால் பள்ளி விடுமுறை நாட்களில் செய்ய வேண்டும். அதை அதிகாரிகளும் அருகிலிருந்து கவனிக்க வேண்டும். பெரும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளை கல்வித்துறையோடு இணைந்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும். புதிதாக கட்டப்படும் கட்டடங்கள் தரமாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் ஆசிரியர்களும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
சரவணன், பேராசிரியர், திண்டுக்கல்.
...........
மேலும்
-
திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு ஆரஞ்சு 'அலெர்ட்': காலை முதல் கொட்டும் மழை!
-
'சண்முகப்ரியாவிற்கு' பத்மஸ்ரீ
-
தீ... தீ.... தீபிகா: தமிழுக்கு முதல் பெண் டி.ஜெ.,
-
'எனக்கு நானே அடையாளம்...' தன்னம்பிக்கை பேச்சாளர் ஹேமமாலினி
-
பறை இசையில் பறக்கும் வேலு ஆசான்
-
2 நாள் அரசு முறை பயணமாக மொரீசியஸ் புறப்பட்டார் பிரதமர்!