மறியல் செய்தவர்கள் மீது வழக்கு

ஆண்டிபட்டி: வருஷநாடு அருகே பூச்சி மருந்து குடித்து கூலி தொழிலாளி சின்ன முனியாண்டி 60, தற்கொலை செய்து கொண்டார். வருஷநாடு காமராஜபுரத்தைச் சேர்ந்த செல்வி 50, என்பவர் சின்ன முனியாண்டி மீது பொய்யாக பாலியல் புகார் கொடுத்ததால் மனவிரக்தியில் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவித்து உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர்.

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு ரோடு மறியல் செய்தனர்.

ரோடு மறியலில் ஈடுபட்ட உத்தமபாளையம் கோகிலாபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் 55, வருஷநாடு காமராஜபுரம் வனராஜ் 55, மணிகண்டன் 55, ராஜேஷ் கண்ணன், குற்றாலன் 52, அல்லிநகரம் மனோகரன் 61, கார்த்திகா தேவி 34, கண்டமனூர் மாசாணம் 56, உட்பட 12 பேர் மீது க.விலக்கு எஸ்.ஐ.பால்பாண்டியன் வழக்கு பதிவு செய்துள்ளார்.

Advertisement