தண்டவாள பராமரிப்பு பணி ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

கோவை : பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருச்சி மலைக்கோட்டை - திருச்சி சந்திப்பில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.

இதை முன்னிட்டு, திருச்சி - பாலக்காடு டவுன்(16843) எக்ஸ்பிரஸ் திருச்சியில் இருந்து மதியம் 1:00 மணிக்கு புறப்படும். இந்த ரியல், திருச்சி - கரூர் இடையே வரும், 11, 18 ஆகிய தேதிகளில் இயங்காது. இந்த ரயில், கரூரில் இருந்து புறப்பட்டு பாலக்காடு டவுன் செல்லும்.

அதேபோல், பாலக்காடு டவுன் - திருச்சி(16844) எக்ஸ்பிரஸ் ரயில், வசதியான இடத்தில் ஒழுங்குபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement