வருஷநாடு மலைப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ

கடமலைக்குண்டு: வருஷநாடு அருகே மேற்கு தொடர்ச்சி மலை மொட்டைப்பாறை மலைப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. மலை அடிவார பகுதியில் இருந்து மேல் நோக்கி வேகமாக பரவும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் கண்டமனூர் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

வருஷநாடு - முருக்கோடை ரோட்டில் மலை அடிவாரத்தில் இடது புறமாக மலையின் கீழ் பகுதியில் இருந்து பற்றி எரியும் தீயால் அப்பகுதியில் உள்ள மரங்கள், புல்வெளிகள் எரிந்து வருகிறது.

இப்பகுதியில் அடுக்கடுக்காக மலை தொடர் உள்ளது. காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் கண்டமனூர் வனத்துறை குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டதா அல்லது உராய்வினால் தீ பற்றியதா என்பது குறித்து விசாரிக்கின்றனர். வனப்பகுதியில் காட்டுத்தீ வைக்கும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Advertisement