தாழ்வாக செல்லும் கம்பிகளை சரிசெய்ய மூங்கில் மின்கம்பம்: அதிகாரிகள் அலட்சியம்
ஏரியூர்: ஏரியூர் அருகே, மின் கம்பிகள் தாழ்வாக செல்வதால், அதை சரிசெய்ய மூங்கிலை மின் கம்பமாக பயன்படுத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் அடுத்த தின்னபெல்லுார் சுற்றுவட்டார பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சில மின்கம்பங்கள் சேதமடைந்தும், அதிலுள்ள மின் கம்பிகள் தாழ்வாகவும் இருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகனங்களில் மின்கம்பிகள் பட்டு, அசம்பாவிதம் ஏற்பட்டு வருகின்றன. சாலையோரங்களில் அமைக்கப்பட்ட மின்கம்பங்களுக்கு அதிக இடைவெளி இருப்பதால், மின்கம்பிகள் மிக தாழ்வாக செல்கின்றன. இதுகுறித்து மின்வாரிய துறையினரிடம் பலமுறை மக்கள் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை.
இதையடுத்து கிராம மக்கள், உயரமான மூங்கில் கொம்புகளை பயன்படுத்தி, கயிறில் கட்டி, மின் கம்பிகள் கீழே தொங்காத அளவிற்கு, ஒரு மினி மூங்கில் மின்கம்பம் போல் செய்து வைத்துள்ளனர். தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் குறித்து தகவல் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய போக்குடன் இருக்கும் மின்வாரியத்துறையினர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரிசெய்ய, கூடுதல் மின் கம்பத்தை நட வேண்டும் என, அக்கிராம மக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
தொகுதி மறுசீரமைப்பால் தமிழகம் பயனடையும்: ராஜ்நாத் சிங்
-
கெஜ்ரிவாலுக்கு சிக்கல்: வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு டில்லி கோர்ட் உத்தரவு
-
இந்தியா -மொரீசியஸ் உறவுகள் வலுவானவை: பிரதமர் மோடி பெருமிதம்
-
தேர்தல் நடைமுறையை வலுப்படுத்த கூட்டம்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் அழைப்பு
-
ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா கையெழுத்துடன் ரூ.100, ரூ.200 நோட்டு வெளியிட முடிவு
-
ரூ.7 ஆயிரம் லஞ்சம்: வி.ஏ.ஓ., - உதவியாளர் கைது