சிறுமியின் கைகளை உடைத்த சித்தப்பா

4

மைசூரு: தான் அழைத்தவுடன் வரவில்லை என்பதால், மூன்று வயது சிறுமியை கடுமையாக அடித்து, கையை உடைத்த சித்தப்பா கைது செய்யப்பட்டார்.

மைசூரு, ஹுன்சூரின் பீரனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த், 23. இவர் ஆட்டோ ஓட்டும் பணி செய்கிறார். இவரது அண்ணன் மகள் ஜான்வி, 3. நேற்று முன் தினம் ஞாயிறு விடுமுறை என்பதால், ஆனந்த் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

அப்போது சிறுமி ஜான்வி, வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரை சித்தப்பா அழைத்து உள்ளார். விளையாட்டில் ஆர்வமாக இருந்த சிறுமி வர மறுத்தார்.

இதனால் கோபமடைந்த ஆனந்த், சிறுமியை பலவந்தமாக ஆட்டோவில் அழைத்துச் சென்று, உருட்டுக்கட்டையால் சரமாரியாக அடித்தார். பலத்த காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

அவரது இரண்டு கைகளும் முறிந்துள்ளன. ஆனந்த் கைது செய்யப்பட்டார்.

Advertisement