மத்திய அமைச்சரை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு: ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள ஜவான் பவன் முன், ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பார்லிமென்ட் கூட்டத்தில் தி.மு.க., அரசு குறித்து மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய பேச்சு நேற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை கண்டித்து தி.மு.க., சார்பில், மாநகர செயலர் சுப்பிரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

துணை மேயர் செல்வராஜ், பகுதி செயலர்கள் ராமசந்திரன், சந்துரு, நடராஜன், மண்டல தலைவர் தண்டபாணி, பி.கே.பழனிசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மணிராசு, திண்டல் குமாரசாமி, குமாரவடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement