ஜார்க்கண்டில் பிரபல ரவுடி அமன் சாவ் சுட்டுக்கொலை; போலீசார் அதிரடி

ராஞ்சி: ஜார்க்கண்டில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட பிரபல ரவுடி அமன் சாவ் சுட்டுக் கொல்லப்பட்டான்.



ஜார்க்கண்ட் மாநிலத்தின் பிரபல ரவுடி அமன் சாவ். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமன் சாவை இன்று ராய்ப்பூரிலிருந்து, ராஞ்சிக்கு போலீசார் வாகனங்களில் அழைத்து சென்றனர்.


ஜார்க்கண்ட் மாநிலம் பலாமு மாவட்டத்தில், போலீசார் வாகனங்களை அமன் சாவ் கூட்டாளிகள் தாக்கினர். அப்போது ரவுடி அமன் சாவ் தப்பித்த ஓட்டம் பிடிக்க முயற்சி செய்தான். போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட பிரபல ரவுடி அமன் சாவ் சுட்டுக் கொல்லப்பட்டான்.



தற்காப்புக்காக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தான் என ஜார்க்கண்ட் மாநில போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். இதில் ஒரு போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.

Advertisement