வனப்பகுதி கிராமங்களுக்கு சாலை; உயர்மட்டக்குழுவினர் அறிவுரை
ஈரோடு: ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக்கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது.
சத்தி, அந்தியூர் தாலுகாவில் சாலை வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வனச்சாலைக்கு பதில், வனத்துறைக்கு வழங்கப்படும் மாற்று நிலம் குறித்த முன்னேற்ற பணி மேற்கொள்ள வேண்டும். பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி திட்டத்தில் நிலுவையில் உள்ள தடையின்மை சான்றை, சம்மந்தப்பட்ட தாசில்தார், பி.டி.ஓ.,க்கள் வழங்க வேண்டும். அனைத்து பஞ்.,களிலும் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தையும், வரி கேட்பு பட்டியலில் சேர்க்க வேண்டும்.
நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதிதாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிநீர் இணைப்பு, மின் விளக்கு, புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்தும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுரை தெரிவிக்கப்பட்டது.
மேலும்
-
ஆட்டோ டிரைவரான டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர்: பெங்களூருக்காரருக்கு ஏற்பட்ட சோகம்
-
உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்: உதயநிதி பேச்சு
-
முன்னறிவிப்பின்றி கட்டண வசூல்: டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்
-
பெற்றோரும் இல்லை, வீடும் இல்லை; தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்த சமூக ஆர்வலர்கள்
-
கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேருக்கு இந்தியாவில் பயிற்சி: பிரதமர் மோடி