ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை உயர்வு

ஈரோடு: ஈரோடு மாநகரில் பல்வேறு பகுதிகளில் நேற்று ஜவுளி வாரச்சந்தை விற்பனை நடந்தது. பல்வேறு மாவட்ட மொத்த விற்பனையாளர், நேரடி தயாரிப்பாளர், வியாபாரிகள், கடைக்காரர்கள் விற்பனையில் ஈடுபட்டனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

கடந்த ஒரு மாதமாக வாரச்சந்தையில் பல்வேறு காரணத்தால் வியாபாரம் மந்தமாக காணப்பட்டது. முகூர்த்த சீசனாக உள்ளதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநில கடைக்காரர்கள், வியாபாரிகள் மற்றும் மக்கள் நேற்று அதிகம் வந்தனர். மொத்த விற்பனை மிகவும் குறைவாக நடந்தாலும், சில்லறை விற்பனை, 40 சதவீதம் வரை நடந்தது. இவ்வாறு கூறினர்.

Advertisement