மல்லிகார்ஜூனா சுவாமி கோவிலில் குண்டம் விழா

சத்தியமங்கலம்: தாளவாடி அருகே தமிழக-கர்நாடக எல்லையில் அமைந்துள்ள, கொங்கள்ளி மல்லிகார்ஜூனா சுவாமி கோவில், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. ஆயிரமாண்டுகள் பழமையான இக்கோவிலில் ஆண்கள் மட்டுமே சுவாமியை வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது.

இங்கு நடப்பாண்டு குண்டம் விழா நேற்று நடந்தது. இதில் பூசாரி மட்டுமே தீ மிதிப்பார். இதன்படி கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் தலைமை பூசாரி மல்லிகார்ஜூனா தீ மிதித்தார். இதையடுத்து புலி வாகன உற்சவம் நடந்தது. விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement