உ.பி.,யில் விஷ ஊசி செலுத்தி பா.ஜ., பிரமுகர் கொலை

சம்பல்: உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டம் ஜூனாவாய் பகுதியைச் சேர்ந்தவர் குல்பம் சிங் யாதவ், 60. பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், தேப்தாரா கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று முன்தினம் தங்கி இருந்தார்.
அப்போது, அங்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், குல்பம் சிங்கை வணங்கி இயல்பாக பேச துவங்கினர். குல்பம் சிங்கின் வயிற்றுப்பகுதியில் திடீரென ஊசியை செலுத்திவிட்டு, அவர்கள் தப்பியோடினர். இதைத்தொடர்ந்து, குல்பம் சிங்கிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும், குல்பம் சிங் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, குல்பம் சிங்கிற்கு செலுத்தப்பட்ட ஊசி விஷத்தன்மை உடையதா என்பதை கண்டறிய, ஆய்வக பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.
மேலும்
-
பயிற்சி டாக்டர்கள் அறையில் கஞ்சா: 3 பேர் கைது
-
யார் அந்த சார்: போலீஸ் குற்றப்பத்திரிகையில் புதிய தகவல்கள்!
-
காந்தி பஜாரின் அடையாளம் வித்யாத்ரி பவன்: மசால் தோசை சாப்பிட முன்பதிவு அவசியம்
-
ரூ.7 லட்சம் மாத வருமானம் 20 பேருக்கு வேலை - அசத்துகிறார் இன்ஜினியர் பூக்கள் வளர்ப்பில் மாதம்
-
ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் மஹாதேவி
-
இருமொழிக் கொள்கையைத் தான் தமிழகம் விரும்புகிறது; தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் மகேஸ் பதில்