ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் மஹாதேவி

பெலகாவியின் கோகாக் காந்த்ராட்டி கிராமத்தை சேர்ந்தவர் எட்டினாமணி, 55. இவரது மனைவி மஹாதேவி, 52. தம்பதிக்கு திருமணமாகி 30 ஆண்டுகளாகி விட்டது. ஒரு மகள் உள்ளார். அவருக்கும் திருமணம் முடிந்து விட்டது. கடந்த 15 ஆண்டுகளாக ஆதரவற்றோர் குழந்தைகளுக்கான இல்லத்தை மஹாதேவி நடத்துகிறார்.
அவர் மனம் திறந்து கூறியதாவது:
இந்த சமூகத்தில் பெற்றோர் இல்லாமல் குழந்தைகள் படும் கஷ்டத்தை நேரில் நிறைய பார்த்து உள்ளேன். இத்தகைய குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், எனது கணவர் ஆதரவுடன், ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லத்தை வாடகை கட்டடத்தில் துவங்கினேன்.
ஆரம்பத்தில் பெற்றோரை இழந்த இரண்டு பிள்ளைகளை பராமரித்து வந்தேன். தற்போது 20க்கும் மேற்பட்ட பிள்ளைகளை பராமரித்து வருகிறேன்.
இந்த பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை எனது சொந்த செலவில் வாங்கி கொடுக்கிறேன். பிள்ளைகள் என்னை அன்புடன், 'அம்மா' என்று அழைக்கின்றனர்.
சிக்கோடியை சேர்ந்த கட்டிமணி என்ற நண்பரும், இந்த ஆசிரமத்தை நடத்த எனக்கு உதவி செய்கிறார். பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்கிறோம். ஆசிரமத்திற்கு வரும் நன்கொடையாளர்கள், பிள்ளைகளுக்கு உணவு, தானியம், பணம், உடைகள், புத்தகங்களை வழங்கினர்.
தற்போது நன்கொடை செய்வோர் எண்ணிக்கை குறைந்து விட்டது. அரசிடம் இருந்தும் எனக்கு உதவி கிடைக்கவில்லை. ஆனாலும் என்னை நம்பி உள்ள பிள்ளைகளை நான் கைவிட மாட்டேன். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஆசிரமத்தை தொடர்ந்து நடத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்
-
ஹரியானாவில் தொடரும் பா.ஜ.,வின் அலை; 10 மேயருக்கான தேர்தலில் 9ல் வெற்றி
-
ஆட்டோ டிரைவரான டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர்: பெங்களூருக்காரருக்கு ஏற்பட்ட சோகம்
-
உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்: உதயநிதி பேச்சு
-
முன்னறிவிப்பின்றி கட்டண வசூல்: டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்
-
பெற்றோரும் இல்லை, வீடும் இல்லை; தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்த சமூக ஆர்வலர்கள்