பஸ்சில் பெண்ணிடம் நகை, பணம் 'அபேஸ்'

கோவை; பஸ்சில் பயணம் செய்த பெண்ணின் பையில் இருந்த நகை, பணம் திருடிய நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம், குன்னுார் பெரும்பாரளி எஸ்டேட்டை சேர்ந்தவர் லதா, 45. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஹவுஸ் கீப்பிங் பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் கோவை வந்தார். காந்திபுரம் மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி பஸ் ஸ்டாப்பில் இருந்து அரசு பஸ்சில் ஏறி, லட்சுமி மில்ஸ் பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். அவரது கைப்பையில் முக்கால் பவுன் கம்மல், ரூ.20 ஆயிரம் வைத்திருந்தார். பஸ்சில் இருந்து இறங்கியதும், ஆட்டோ வாயிலாக பணிபுரியும் இடத்துக்கு சென்றார்.

அங்கு சென்ற போது, கைப்பையில் இருந்த பணம், நகை மாயமாகி இருந்தது. ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், விசாரித்து வருகின்றனர்.

Advertisement