ராமநாதபுரத்தில் கனமழையால் வெள்ளம்.. உப்பு உற்பத்தி பாதிப்பு! தொழிலாளர்கள் வேலையின்றி முடக்கம்

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் நேற்று பெய்த கனமழையால் நகர் பகுதியில் வெள்ளம் சூழந்ததுடன் பள்ளிக்குள் புகுந்தது. உப்பள பாத்திகளில் மழைநீர் புகுந்ததால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதால் தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கினர்.
தமிழ்நாட்டின் கடற்கரையோர மாவட்டங்களில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் அதிகளவு துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து கிடைக்கிறது. ஆகஸ்ட் முதல் ஜன., வரை பருவமழையால் உப்பு உற்பத்தி நிறுத்தப்படும்.
ஜன., கடைசி வாரத்தில் இருந்து உப்பு உற்பத்திக்கான முன்னேற்பாடு பணிகள் துவங்கும். உப்பளங்களில் 27 டிகிரிக்கு மேல் வெப்பம் இருந்தால் மட்டுமே உப்பு அள்ள முடியும். அதற்கு மேல் வெப்பம் இருந்தால் அதிகளவு உப்பு உற்பத்தி கிடைக்கும். வெப்பம் குறைவாக இருந்தால் உப்பு உற்பத்தியை பாதிக்கும்.
இந்த ஆண்டு உப்பு உற்பத்திக்கான முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்த நிலையில் உற்பத்தி துவங்குவதற்கு முன் மார்ச் முதல் தேதி மழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டது. உப்பளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் இந்த நீரை வடித்து விட்டு மீண்டும் உவர்ப்பு நீரை சேமித்து உப்பு உற்பத்தியை தொடங்குவார்கள்.
இந்த ஆண்டு சீசன் ஆரம்பத்திலேயே உற்பத்தி பாதிப்பு இருப்பதால் 2 லட்சம் டன் உற்பத்தி இலக்காக தொழிலாளர்கள் நிர்ணயித்திருந்த நிலையில் மழையால் உற்பத்தியானது 25 சதவீதம் வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மார்ச் 1 முதல் தற்போது வரை உப்பு உற்பத்தி இல்லை. மொத்த உற்பத்தியில் 25 சதவீதம் வரை உப்பு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.
பள்ளிக்குள் புகுந்த மழை நீர்
மாவட்டத்தில் நேற்று காலையில் கனமழையும், மதியம் வரை பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 6:00 முதல் மதியம் 2:00மணி வரை(மி.மீ.,) ராமநாதபுரம் 28 மி.மீ., பாம்பன் 12.50, ஆர்.எஸ்.மங்கலம் 15, தொண்டி 7, பள்ளமோர்க்குளம் 12.50, பரமக்குடி 9, கமுதி 14.60, கடலாடி 32.60, வாலிநோக்கம் 39.80 மி.மீ., என மாவட்டத்தில் 193 மி.மீ., மழை பதிவாகியது.
கன மழை காரணமாக ராமநாதபுரம் நகர், சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சியில் குளம் போல ரோடுகள், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் சிரமப்பட்டனர். புதுபஸ் ஸ்டாண்ட் அருகே வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வளாகத்தை சூழந்ததால் மாணவர்கள் சிரமப்பட்டனர். நகராட்சி நிர்வாகத்தினர் மோட்டார் மூலம் அகற்றினர். உழவர்சந்தை வளாகத்தில் தேங்கிய நீரால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.
மேலும் ஒம்சக்திநகர், பாரதிநகர், மதுரை, ராமேஸ்வரம் ரோட்டில் தண்ணீர் குளம்போல தேங்கியதால் வாகன ஓட்டிகள், மக்கள் சிரமப்பட்டனர். மழைநீரை ஊருணிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் வரத்துகால்வாய்களை சீரமைக்க நகராட்சி, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
உடனே குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்: உதயநிதி பேச்சு
-
முன்னறிவிப்பின்றி கட்டண வசூல்: டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்
-
பெற்றோரும் இல்லை, வீடும் இல்லை; தவித்த குழந்தைகளுக்கு வீடு கட்டித் தந்த சமூக ஆர்வலர்கள்
-
கோவை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் எச்சரிக்கை
-
மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேருக்கு இந்தியாவில் பயிற்சி: பிரதமர் மோடி
-
அமைச்சர்களின் பேரன்கள் எங்கு படிக்கின்றனர்? அண்ணாமலை கேள்வி