மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேருக்கு இந்தியாவில் பயிற்சி: பிரதமர் மோடி

போர்ட் லூயிஸ்: 'அடுத்த 5 ஆண்டுகளில் மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேர் இந்தியாவில் கல்வி பயில்வார்கள்' என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான மொரீஷியஸ் நாட்டின் தேசிய தினம் மற்றும் சுதந்திர தினத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக சென்றுள்ளார். மொரீஷியஸ் பிரதமர் நவின் ராமகூலம் மற்றும் பிரதமர் மோடி சந்தித்து பேசினர். பின்னர் இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
மொரீஷியஸின் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: மொரீஷியஸின் பொருளாதாரத்தின் பாதுகாப்பைப் பராமரிப்பதில் நாங்கள் ஒத்துழைக்க உறுதிபூண்டுள்ளோம். கடலோரக் காவல்படையினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நாங்கள் ஒத்துழைப்போம்.
இந்தியாவும் மொரீஷியஸும் இந்தியப் பெருங்கடலால் மட்டுமல்ல, கலாசாரத்திலும் ஒற்றுமையாக உள்ளனர். பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியின் பயணத்தில் நாங்கள் பங்காளிகள். நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் துணை நின்றுள்ளோம். அது சுகாதாரம், விண்வெளி அல்லது பாதுகாப்பு எதுவாக இருந்தாலும், நாங்கள் ஒருவருக்கொருவர் முன்னேறி வருகிறோம்.
அடுத்த 5 ஆண்டுகளில் மொரீஷியஸ் நாட்டினர் 5 லட்சம் பேர் இந்தியாவில் கல்வி பயில்வார்கள். 140 கோடி இந்தியர்களின் சார்பாக, மொரிஷியஸின் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தினத்தை பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
விருது வழங்கி கவுரவிப்பு
மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய, 'த கிராண்ட் கமாண்டர் ஆப் த ஆர்டர் ஆப் த ஸ்டார் அண்ட் கீ ஆப் த இந்தியன் ஓஷன்' என்ற விருதை, பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் பிரதமர் நவின் ராமகூலம் வழங்கி கவுரவித்தார்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றார். இதன் வாயிலாக, மோடி, 21வது சர்வதேச கவுரவ விருதைப் பெற்று உள்ளார்.


மேலும்
-
பாக்.,கிற்கு பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் 24 மணி நேரம் கெடு
-
உரிமைகளை பறிப்பதை பார்த்து கொண்டிருக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
பாடவாரியான உலக தரவரிசை பட்டியல்: முதல் 50ல் இடம் பிடித்த 9 இந்திய பல்கலைகள்
-
சமகல்வி என்பது நமது உரிமை: அண்ணாமலை
-
புதுக்கோட்டைக்கு கிடைத்த கவுரவம்: ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை அமைப்பு
-
மதத்தை வைத்து என்னுடன் விளையாடாதீர்கள்: பா.ஜ.,வுக்கு மம்தா பதிலடி