முன்னறிவிப்பின்றி கட்டண வசூல்: டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள்

3

பட்டிவீரன்பட்டி: சேவுகம்பட்டி டோல்கேட்டில் முன்னறிவிப்பின்றி வாகனங்களுக்கு கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டதால் சுற்றுப்புற கிராமத்தினர், விவசாயிகள் அதிருப்தி அடைந்து டோல்கேட்டை அடித்து சேதப்படுத்தினர்.


திண்டுக்கல் குமுளி ரோடு அகலப்படுத்தும் பணி 2020 இல் முடிவடைந்தது. 2021 சேவுகம் பட்டியில் சுங்கவரி வசூலிப்பதற்காக டோல்கேட் அமைக்கப்பட்டது. அப்போது பொதுமக்கள் சிலர் இருவழிச் சாலைக்கு டோல்கேட் கட்டணம் வசூலிப்பது கூடாது என கோர்ட்டில் தடையானை பெற்றதால் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 2023 மீண்டும் வருவசூழிப்பு செய்ய ஏற்பாடுகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டது. அப்போதும் நிலக்கோட்டை டி.எஸ்.பி., ஆக இருந்த முருகன் ரோடு பணிகளை முழுமையாக முடித்துவிட்டு கட்டணம் வசூலிக்கலாம் என கூறியதால் வாகனங்கள் கட்டண வசூல் துவங்கவில்லை.

நேற்று(மார்ச் 11) தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் மாவட்ட எஸ்.பி., நிலக்கோட்டை டி.எஸ்.பி., தாசில்தார், பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு மார்ச் 12 காலை 8 மணிக்கு சுங்கவரி கட்டணம் துவங்க இருப்பதால் பாதுகாப்பு வழங்கும் படி அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. இத்தகவல் சுற்றுப்புற கிராமத்தினருக்கு தெரிய வந்ததால் இன்று( மார்ச் 12) காலை 6 மணிக்கு டோல்கேட் வந்தனர்.8:30 மணிக்குள் கேமராக்கள், கம்ப்யூட்டர்கள், சென்சார் போர்டுகள் அனைத்தையும் அடித்து நொறுக்கினர். அலுவலக கண்ணாடிகளும் அடித்து நொறுக்கப்பட்டது. 8 மணிக்கு மணிக்குத் தானே துவக்க விழா என்பதால் அதிகாரிகள் தாமதமாக தான் வந்தனர். அதற்குள்ளாகவே டோல்கேட் முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டது. இதை அடுத்து டோல்கேட்டில் வாகனம் கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News

Advertisement