போக்சோவில் வாலிபர் கைது

ஈரோடு: அந்தியூர் தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஜீவானந்தம், 22; பவானி பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்தார்.

நேற்று முன்தினம் ஜீவானந்தம் சிறுமியின் வீட்டிற்கு அருகே சென்று காதல் தொல்லை கொடுத்ததை, சிறுமியின் பெற்றோர் பார்த்து, ஜீவானந்தத்தை பிடித்து பவானி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரித்த போலீசார் அவரை, போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

Advertisement