அதிக வரி விதிக்கும் இந்தியா: அமெரிக்கா மீண்டும் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்காவின் மதுபானங்களுக்கு 150 சதவீதம், விவசாய பொருட்களுக்கு 100 சதவீத வரியை இந்தியா விதிக்கிறது என அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.
அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் அதிக வரியை விதிப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி இருந்தார். இதை தொடர்ந்து அந்த நாடுகள் எந்தளவுக்கு வரி விதிக்கிறதோ, அந்த அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் எனவும், இந்தியா, சீனா மீதான பரஸ்பர வரி விதிப்பு ஏப்., 2 முதல் அமலுக்கு வரும் எனவும் கூறினார்.
இது தொடர்பாக லோக்சபாவில் மத்திய அரசு அளித்த விளக்கத்தில், அமெரிக்காவின் வரி விதிப்பு இன்னும் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருவதாக விளக்கம் அளித்து இருந்தது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட் கூறியதாவது: இந்தியாவை பாருங்கள். அமெரிக்காவின் மதுபானத்திற்கு 150 சதவீதம் வரி விதிக்கிறது. இது அந்நாட்டிற்கு அமெரிக்க நிறுவனம் ஏற்றுமதி செய்வதற்கு உதவுமா? அப்படி நடக்காது என நினைக்கிறேன்.
விவசாய பொருட்களுக்கு 100 சதவீத வரியை இந்தியா விதிக்கிறது. பரஸ்பர வரி விதிப்பில் அதிபர் டிரம்ப்பிற்கு நம்பிக்கை உள்ளது. அமெரிக்க வணிகம் மற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் அதிபர் தற்போது நமக்கு கிடைத்து உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.







மேலும்
-
பாக்.,கிற்கு பலுசிஸ்தான் கிளர்ச்சியாளர்கள் 24 மணி நேரம் கெடு
-
உரிமைகளை பறிப்பதை பார்த்து கொண்டிருக்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
பாடவாரியான உலக தரவரிசை பட்டியல்: முதல் 50ல் இடம் பிடித்த 9 இந்திய பல்கலைகள்
-
சமகல்வி என்பது நமது உரிமை: அண்ணாமலை
-
புதுக்கோட்டைக்கு கிடைத்த கவுரவம்: ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை அமைப்பு
-
மதத்தை வைத்து என்னுடன் விளையாடாதீர்கள்: பா.ஜ.,வுக்கு மம்தா பதிலடி