பாடவாரியான உலக தரவரிசை பட்டியல்: முதல் 50ல் இடம் பிடித்த 9 இந்திய பல்கலைகள்

8

புதுடில்லி: பாட வாரியான தரவரிசையில் உலகின் முதல் 50 இடங்களில் ஒன்பது இந்திய பல்கலை மற்றும் கல்வி நிறுவனங்கள் இடம் பிடித்துள்ளன.

உலகின் சிறந்த பல்கலைகளின் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் லண்டனை சேர்ந்த குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் (க்யூ.எஸ்) என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிட்டு வருகிறது. க்யூ.எஸ். பட்டியலில் இடம்பெறும்போது, மொழி, ஒழுக்கம், நிறுவன திறன் செயல்பாடு ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆய்வு வெளியீடுகளின் எண்ணிக்கை, வெளியீட்டிற்கு மேற்கோள்கள், ஒரு வெளியீடிற்கான சராசரி தாக்கம் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.

அதன்படி, இன்று க்யூ.எஸ். 15வது தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

உலகின் முதல் 50 பல்கலைகளில் 9 இந்திய பல்கலை மற்றும் நிறுவனங்கள் இடம்பிடித்தன.

தன்பாத்தில் உள்ள இந்திய சுரங்கப் பள்ளி முன்னணியில் உள்ளது, இது பொறியியல் -கனிம மற்றும் சுரங்கத்திற்கான பாடப்பிரிவில் உலகளவில் 20வது இடத்தில் உள்ளது, இது நாட்டின் மிக உயர்ந்த செயல்திறன் கொண்ட பாடப் பிரிவாகும்.

பட்டியலில் உள்ள மூன்று ஐ.ஐ.டி.,க்கள், இரண்டு ஐ.ஐ.எம்.,கள் மற்றும் ஜே.என்.யு., உள்ளிட்ட சில சிறந்த நிறுவனங்கள், முந்தைய ஆண்டில் இருந்து தங்கள் நிலைகளில் சரிவைக் கண்டன.

பொறியியல்-கனிம மற்றும் சுரங்கத் துறையில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) மும்பை மற்றும் கரக்பூர் ஆகியவை 28வது மற்றும் 45வது இடங்களில் தரவரிசையில் உள்ளன. இருப்பினும், இரண்டு நிறுவனங்களும் முந்தைய ஆண்டில் இருந்த தங்கள் நிலைகளில் சரிவைக் கண்டன.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் 45வது இடத்தைப் பகிர்ந்து கொண்ட ஐ.ஐ.டி., டில்லி மற்றும் மும்பை ஆகியவை முறையே 26வது மற்றும் 28வது இடத்தைப் பிடித்தன.

பொறியியல்-மின்சாரம் மற்றும் மின்னணுத் துறையில் இரண்டு நிறுவனங்களும் தங்கள் தரவரிசையை மேம்படுத்தி முதல் 50 பட்டியலில் இடம் பிடித்தன.


வணிகம் மற்றும் மேலாண்மை படிப்புகளுக்கான உலகின் முதல் 50 இடங்களில் இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம்) ஆமதாபாத் மற்றும் பெங்களூரு தொடர்ந்து இடம் பெற்றன.

ஆனால் அவற்றின் தரவரிசை முந்தைய ஆண்டை விடக் குறைந்துள்ளது. ஐ.ஐ.எம்., ஆமதாபாத்தின் தரவரிசை 22ல் இருந்து 27வது இடத்திற்கும், ஐ.ஐ.எம்., பெங்களூருவின் தரவரிசை 32ல் இருந்து 40வது இடத்திற்கும் சரிந்தது.

ஐ.ஐ.டி மெட்ராஸ் (பெட்ரோலிய பொறியியல்) மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலை (ஜேஎன்யு) (வளர்ச்சி ஆய்வுகள்) உலகின் முதல் 50 இடங்களில் தொடர்ந்து இருந்தன. ஆனால் அவற்றின் தரவரிசையும் சில இடங்கள் சரிந்தன.

Advertisement